மரண அறிவித்தல்
திருமதி தேவமலர் பென்ஜமீன்
நாவலியைப் பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியை திருமதி தேவமலர் பென்ஜமீன் (MGHS, point Pedro, அல்பாகிறியா முஸ்லீம் பாடசாலை, புளூமெண்டல் தமிழ் மகா வித்தியாலயம்) அவர்கள் (23.01.2017) திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற யோசுவா பென்ஜமீன் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற அருட்சகோதரி குயின்சி, ரிசெட், கீதா, அஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும் மோகன், காலஞ்சென்ற கிறிஸ்ரி, பீரிஸ்ஸிலா ஆகியோரின் அன்பு மாமியாரும், அஷான், பிலேஸ்ஸினா, திமொத்தி, டினித்தி, நேதன், எஸ்றா ஆகியோரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்ற திரு.திருமதி நாகலிங்கம் அவர்களின் அன்பு மகளும், ஜெயமணி, அருளானந்தம், பரமானந்தம், ஜீவானந்தம், நவமலர், ரஞ்சி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று புதன்கிழமை பி.ப 4.00 மணிக்கு இல.15, கௌடான, றோட், தெஹிவளையில் நடைபெற்று பின்னர் கல்கிசை சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.