மரண அறிவித்தல்
திருமதி நேசமணி சபாரட்ணம்
ஏழாலையை பிறப்பிடமாகவும், குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும், கொண்ட திருமதி நேசமணி சபாரட்ணம் அவர்கள் (28.02.2017) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட மகளும் அமரர் சரவணமுத்து சபாரட்ணத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கபிரியேற்பிள்ளை செல்லமணி, செல்வராசா புவனேஸ்வரி, கனகரத்தினம் நாகரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரியும், கிருபாகரன் (நிதி உதவியாளர், பி.சு.சே திணைக்களம், வவுனியா), பிரபாகரன், உமாகரன் (கணக்காய்வாளர், நியூபத்ரா அன்கோ), சுபாகரன் (பிரான்ஸ்), மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கிருபாநிதி (ஆசிரியர், வ/ விபுலானந்தா கல்லூரி), சந்திரவதனி, சுகந்தி (ஆசிரியர், வ/ஓமந்தை மத்திய கல்லூரி), கவிதா, கௌதீபன் ஆகியோரின் மாமியாரும், கிருசயனன், திகாளன், சியாமிளன், தூரிகா, கவிநயா, யவின்சிகா, தருமினன், யாமினன், நயன்தானா, அதிஷ்ரயா, ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.03.2017) புதன்கிழமை 12.00 மணிக்கு இல 24 குமரபுரம் பரந்தனில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பரந்தன் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.