மரண அறிவித்தல்
திருமதி பொன்னம்பலம் பதஞ்செல்வி
வவுனியா ஓமந்தை மரையடித்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுமுகத்தான் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பதஞ்செல்வி அவர்கள் 19-11-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மராணி(இலங்கை), காலஞ்சென்ற தர்மரஞ்சிதம், தனலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற ரவீந்திரன், ஸ்ரீதரன்(கனடா), தர்மகுமாரி(நெதர்லாந்து), பாஸ்கரன்(கனடா), தர்மரூபி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சின்னையா, குமாரசாமி(இலங்கை), காலஞ்சென்ற கதிரேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கமலதேவன், இராதாகிருஸ்ணன், மற்றும் நேசமணி(இலங்கை), குணநாயகி(கனடா), செளந்தர்ராஜா(நெதர்லாந்து), தயானி(கனடா), ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகதீஸ்வரன், ரஜிதா, சங்கீதா, ஜெகதீபன், ஜெகரூபன், கமலரூபன், கமலகிருபா, துர்க்கா, கெளதினி, கபிலன், அனுஜா, சுஜிதன், மிதுஜா, தனுஜா, கீர்த்தன், மதுசினி, நிதுசினி, மயூரன், தனுசியா, ஜனனி, தர்சனா, அகிலன், அபிநயா, அதிசயா, கர்ஜினி, ஜனிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாத்விகா, சுருதிகா, லதுமிகா, ஆகாஸ், ரித்திக், ரோதித், அக்சித், கபினா, சதனா, லவன், சைலயன், சுஜன், விசாகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்