மரண அறிவித்தல்
திருமதி மகாலிங்கம் பொன்றோஸ்
மன்னார் எழத்தூரைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பொன்றோஸ் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமளும்,மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மஞ்சு(சுவிஸ்), ராஜி(லண்டன்), றஜனா(இலங்கை), மயூரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற அமிர்தநாதன் மற்றும் பிரகாசம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், அருண்(சுவிஸ்), ரவி(லண்டன்), சதாத்(இலங்கை), சுபா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பூபாலசிங்கம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், லிவின்ஸ்ரோன், மதுசிகா, அபிஷன், தனிஷா, மார்வின், ரவின், பெர்வின், அர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் ஏழாலை இஸிதோர் ஆலயத்தில் 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஏழாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்