மரண அறிவித்தல்
திருமதி மேரி ஞானமணி யோசவ்
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி ஞானமணி யோசவ் அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மெல்கியோர் மரியாம்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற யோசவ்(இளைப்பாறிய ஆசிரியர்- மிருசுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
மதுரம்(லண்டன்), ராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருட்சகோதரி சன்றா, தவராஜ்(லண்டன்), யோகா(லண்டன்), புவிராஜ்(பணிப்பாளர் நிதி அமைச்சு- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செபஸ்ரியன்(லண்டன்), காலஞ்சென்ற விஜயசிங்கம், ரஜனி(லண்டன்), கிருஸ்தோப்பர்(லண்டன்), யசோ(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-02-2017 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதி என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்