மரண அறிவித்தல்
திருமதி மேரி யோசப் பிலோமினா
யாழ். உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயப்பங்கைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட மேரி யோசப் பிலோமினா அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் அமலஉற்பவம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானமுத்து சவராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மேரி யோசப் அவர்களின் அன்புத் துணைவியும்,
பப்சன் லீலி(செல்லா- போதனா ஆசிரியை), ஸ்ரனிஸ் லொஸ்(ஜீவா- ஜேர்மனி), மேரி கிளேறா லீலி(யோகா), ஜோன் ஜெனிஸ்(தேவா- லண்டன்), அருட்பணி அன்ரனி கியூபேட்(அ.ம.தி), அன்ரன் யூட்ஸ்(தயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சூசானம், ஞானரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெறோம்(காட்வெயாய் பண்டத்தரிப்பு), வெனிக்னாயோப், மங்களதாஸ்(ஆசிரியர் யா/சங்கானை சிவப்பிரகாச இந்து ஆரம்பப் பாடசாலை), ஜேக்கொலின் டல்சி, சுஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஜேக்கப், மேரி மெற்றலின் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
போல் அபிராஜிதன், சந்தோஸ், டினிஸ்ரன், தனுஜன், லெளறா, லக்ஷன், லருஷா, அஜித், மெல்வின் அஞ்சலி, லவன், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 16-05-2020 சனிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் புனித செபமாலை மாதா ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பண்டத்தரிப்பு புனித செபமாலை அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.