மரண அறிவித்தல்

திருமதி R.W அன்னபூரணம் அழகரத்தினம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தும்பளை ஒருதானை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி R.W அன்னபூரணம் அழகரத்தினம் நேற்று 30.11.2015 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற R.W அழகரத்தினம் (ஓய்வுநிலை கல்வி அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுகிர்தரத்தினம் மற்றும் கமலரத்தினம் (கனடா), யோகரத்தினம் (ஓய்வு நிலை தாதிய உத்தியோகத்தர், தாதிய நிர்வாக அதிகாரி- அக்குறணை), சீதாரத்தினம் (டென்மார்க்), விமலரத்தினம் (ஓய்வுநிலை பிரதி அதிபர், தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயம்), நிமலரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயும்,

காலஞ்சென்ற ச.சோமசுந்தரம் (ஓய்வு நிலை வருமான வரி மதிப்பீட்டாளர்) மற்றும் ஆ.கார்த்திகேசு (ஓய்வு நிலை கணக்காளர், உள்ளுராட்சி அமைச்சு -கனடா), காலஞ்சென்ற சி.பாலசுப்பிரமணியம் (டென்மார்க்) மற்றும் ஆ.சிவகுமாரன் (பொருளாளர், நெல்லண்டை அம்மன் கோயில் தரும பரிபாலன சபை), இ.கணேசநாதன் (ஓய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற ஜெயலீலா ஆகியோரின் மாமியும்,

திருமதி மங்களேஸ்வரி தவபாலசந்திரன் (கொழும்பு), காலஞ்சென்ற யோகாம்பாள் மற்றும் மீனலோஜினி, நவரத்தினரத்திகராசா, Dr.தேவலோஜினி-தயாபரன், Dr.தனசாயிதன் (ராகம)-துருசாந்தி, கிருசாயினி, முரளிதரன், Dr .கிருபாகரன் (டென்மார்க்), காண்டீபன் (சம்பத் வங்கி யாழ்ப்பாணம்), நிரஞ்சனி, சிந்திக்கா – பிரதீபன் ஆகியோரின் பேர்த்தியும்,

கௌசிகா, சுதர்சன், சஜீலினி, செந்தீபன், சுஜன், ரம்மியா, கொயானா, பிறயனா, ஜெய்தன், கெனிஸ்கா, வருண், நிசாந்திக்கா, நிசான் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 01.12.2015 செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோரியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்-

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 01.12.2015, செவ்வாய்க்கிழமை
இடம் : கோரியடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 226 4101