மரண அறிவித்தல்
திரு அந்தோனிமுத்து அன்ரனிவின்சன் (துரைமணி)
யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்று, பருத்தித்துறை VM வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து அன்ரனிவின்சன் அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, மதலேனம் தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவசகாயம் ஜெபமேரி பற்றிமா(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜேம்ஸ் சில்வெஸ்ரர்(இத்தாலி), றோசலின்(இத்தாலி), வில்சன் ஜெறின்(சமுர்த்தி முகாமையாளர்- உடுப்பிட்டி), அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ்(பங்குத்தந்தை- பளை), சில்வெஸ்ரர் ஜெகதாஸ்(பெல்ஜியம்), சில்வெஸ்ரர் ரேனுதாஸ்(லண்டன்), மேரி ஜக்குலின்(பிரான்ஸ்), மேரி செபோஜினி(லண்டன்), ஜெயரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவுலினப்பு, தார்சியஸ்(கனடா), காலஞ்சென்ற தார்சில்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளவரசி, நிக்ஷன், ரவிச்சந்திரன், லக்சனா, நந்தன், ரொனால்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருட்தந்தை றெஜிக்குமார் அமதி(உப அதிபர்- புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,
விதுஷா, திரிஷா, டிலக்சனா, அபிஷாந், திரிஷாந், ஜெசிக்கா, அர்வினா, றொபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பருத்தித்துறை VM வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செம்பியன் வடக்கிலுள்ள அவரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்- குடும்பத்தினர்