மரண அறிவித்தல்
திரு இளையகுட்டி நல்லையா
யாழ். மண்டைதீவு தெற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையகுட்டி நல்லையா அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையகுட்டி, ஸ்ரீமாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, இராசயாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
பவானந்தன்(இந்தியா), காலஞ்சென்றவர்களான தேவானந்தன், தயானந்தன் மற்றும் சந்திரவதனா(இலங்கை), சத்தியானந்தன்(பிரான்ஸ்), சற்குணானந்தன்(கனடா), காலஞ்சென்ற கேதாரவதனா, மதிவதனா, சதானந்தன்(கனடா), காலஞ்சென்ற புஷ்பானந்தன், தவவதனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நன்னியாட்சி, கண்ணாத்தை, சின்னம்மா, சதாசிவம், செல்லம்மா, தில்லைவளம், சில்லம்மா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற அன்பரசி, காந்தரூபி, லோசா, இளஞ்செழியன், விஜி, காலஞ்சென்ற சரஸ்வதி, ஜெயகாந்தன், றஜிதா, வதனரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனாத்தகி, தாரணி, மிதுனா, பிரசன்னா, சஞ்சா, சந்தியா, கீர்த்திகா, சஜீவன், திலக்ஷன், ஹரணிகா, சரணிகா, மிதுனன், கோகிலன், லவன், நிதர்ஷன், தரணிகா, பிரியா, தினேஷ், தர்சி, அஷ்வினி, தனுஷ், சிந்துஜன், சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திஸாந், கனுஜன், வைஷ்ணிகா, சனோஜன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.