மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை சண்முகராசா (மில்கார சண்முகராசா)
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சண்முகராசா அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஐயாத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கருணாநிதி, சத்தியவாணி(கனடா), கண்ணதாசன்(கனடா), விக்னேஷ்வரன்(இலங்கை), சத்தியபாமா(கனடா), சத்தியராசா(தம்பி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற தவமணி, நாகேஸ்வரி, பராசக்தி, மகேஷ்வரன், ராசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி(இத்தாலி), கிருபாகரன்(கனடா), நிர்மலாயினி(கனடா), தமிழினி(இலங்கை), சிவலோகராசா(கனடா), சர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஐஸ்வரி, சண்முகம், ராசன், பாலன், ராசா, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கிளிநொச்சி வட்டக்கச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 294,
5ம் யூனிட்,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்