மரண அறிவித்தல்
திரு சதாசிவம் இராசரத்தினம்
யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடையார்கட்டு வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இராசரத்தினம் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
நடராசா- பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகரத்தினம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்ற செல்வநாயகம்(செல்லகிளி அம்மான்), சரஸ்வதி, சந்தானலட்சுமி, யோகராணி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோகரன், சுமதி , காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காஞ்சனாதேவி, பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமலன், சாருஜன், புவிதன், தசானி, துளசிகா, சஜிந்தன், ரதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உடையார்கட்டு வடக்கு வெள்ளப்பள்ளம் மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்