மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி நாகராசா
(கலாபூசணம், சிற்பஸ்தாபன ஸ்தாபகர், சிற்பாச்சாரியார், தவில், மிருதங்கம், பேரி வாத்திய தயாரிப்பாளர்)
யாழ். வட்டுக்கோட்டை மூளாய்ரோட்டையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா அவர்கள் 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மாணிக்கம்(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து
பூரணம்(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிகலா(கோண்டாவில்), றஞ்சிதகலா(கனடா), சாந்தினி(பிரான்ஸ்), வாசுகீ(கனடா), றஞ்சகுமார்(லண்டன்), ஈஸ்வரகுமார்(பிரான்ஸ்), தாட்சாயிணி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தில்லைநாதன்(கொக்குவில்), நாகேஸ்வரி(மூளாய்ரோடு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணராஜா, விஜயகுமார், ஜெகநந்தன், றூபகலா(லண்டன்), குபேந்தினி(பிரான்ஸ்), டன்ரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, காலஞ்சென்ற நடராசா, இராஜலட்சுமி, சிவபாலசுந்தரம், சரவணபவானந்தன், காலஞ்சென்ற நடராஜசுந்தரம், இராமநாதன், கதிர்காமநாதன், காலஞ்சென்ற இராசலிங்கம், கணேசலிங்கம், பரமேஸ்வரன், காலஞ்சென்ற கமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி, சங்கீதா, சானுஜன், சந்தோஷ், பிரீத்தி, சாமிரா, விகாஷ், டிலுஜா, றோகித், றோமிஷா, சஜித், கபிஸ், அக்ஷி, அஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் |:குடும்பத்தினர்
அசாரிவீதி,தாவடி,
கோண்டாவில் மேற்கு,கோண்டாவில்