மரண அறிவித்தல்

திரு. ஜயம்பிள்ளை பூபாலசிங்கம்

தோற்றம்: 14.03.1932   -   மறைவு: 16.08.2017

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜயம்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் (16.08.2017) புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பரமு ஜயம்பிள்ளை இராசம்மா அவர்களின் அன்பு மகனும், நல்லதம்பி ஆறுமுகம் பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும், கமலாம்பிகையின் அன்பு கணவரும், மாலதி, கேதீசன், வசந்தி, கிருபாகரன், சிவநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெகன்நாதன், சிவசக்தி, நாகேந்திரஜா, ஆகியோரின் அன்பு மாமனாரும், ரமேஷ் ராஜ், அருண், ஜொனத்தன், சிந்தியா, ஜெயந்தன், அஜந்தா, அபிரா, ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் A.F Raymond மலர்ச்சாலையில் ஞாயிறு காலை 8 மணிக்கு 20.08.2017 அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 4 மணியளவில் கனத்தையில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வை
திகதி : 16.08.2017- 19.08.2017
இடம் : A.F Raymond மலர்ச்சாலையில்
தகனம்
திகதி : 20.08.2017
இடம் : கனத்தையில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0777593043
கைப்பேசி : 0777302780