மரண அறிவித்தல்
திரு ஜெகநாதன் ஜினோபன்
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகநாதன் ஜினோபன் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, இராசம்மா(கனடா) தம்பதிகள், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வராசா, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் அன்பு மகனும்,
செந்தில்நாதன் அனுஷியா, கணேசநாதன் குலதர்சினி ஆகியோரின் பெறாமகனும்,
ஜானகி திருஞானசம்பந்தன், சரஸ்வதி நாகராசா(வவுனியா), துளசி கணேசலிங்கம், அனுஷா சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
ரஜனி சிவசுதன், சுதாகர், ராஜீவ் நிவேதா, அஜந்தா, ஜெயப்பிரசாந், தமிழினி, நிவேதா, பிரசன்னா, நித்தியா, அபிரா, ஆரண்யா, பிரவீன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
விஷ்ணுப்பிரியா ரகுநாத், வைஷ்ணவி, வைதேகி, சங்கவி, கரிஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சரஸ்வதி(அத்தை) — இலங்கை