மரண அறிவித்தல்
திரு.ஞானப்பிரகாசம் அல்பிரேட்
யாழ்,பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஞானப்பிரகாசம் அல்பிரேட் அவர்கள் (12.01.2017) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும், ரோஷாலின் (Baby) அவர்களின் அன்புக்கணவரும் ஜெயக்குமார்(ஜேர்மனி), ஜெயந்தி (லண்டன்),இந்திரன் (லண்டன்), வசந்தி (லண்டன்), சாந்தி (லண்டன்), ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பலி அந்தோனிப்பிள்ளை, அழகுதுரை (லண்டன்), ராணி (அமெரிக்கா), ஆகியோரின் சகோதரனும் டினிசியஸ்,பிரிஷாந், தரண், எய்ட்ரன், ஏன்ஜ், கெஷோத்மன், கெஷமன், நிதுஷா, கிரிஷா, விஷால் ஆகியோரின் பேரனும் புஷ்பராஜ், சுரேஸ்கந்தா, ஜெயபாலன், லிடில் மேரி, யாழினி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் (16.01.2017) திங்கட்கிழமை முதல் (20.01.2017) வெள்ளிக்கிழமை வரை No.77,Delasalle street, Mutuwal, colombo – 15 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் (21.01.2017) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் அருகில் உள்ள St.Andrew’s church ல் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.