மரண அறிவித்தல்
திரு தங்கராசா ரம்மியன்
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ரம்மியன் அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா(Dr. பரம்), லோகசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், மனோகரன் ஜெயகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரவீனா(பருத்தித்துறை வீதி- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும், சுரேந்திரா(பிரான்ஸ்), உசானந்(இலங்கை), ஜெயசந்திரன்(இலங்கை), ரூபசந்திரன், ஜெயபாலன், கெளரி, சுகிர்தா, காயத்திரி, லதா, நிரஞ்சனா, லக்ஷி ஆகியோரின் அன்புச் சகோதரரும், தனபாலசிங்கம், புஸ்பராசா தவமணி, மனோன்மணி, சித்தரஞ்சன் யோகராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்ற லோகநேசன்(ஆசிரியர்), லோகதாசன், மனோகரன், சந்திரசேகரன், குணசேகரன், ரவிசந்திரன், காலஞ்சென்றவர்களான மீனாட்சியம்மா, தங்கச்சிபிள்ளை, சுபத்திரா மற்றும் ராசாத்தி, பரமேஸ்வரி, சிதம்பரா, ஜீவரேகா, ஜெயராணி, அரியரட்ணம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும், சரசந்திரன்(லண்டன்), சிவாகரன், தயானந்தா, நிமல், லோகேந்திரா, ஜெயசீலன், சிறிகுமாரி, யசோ, யாழினி, வர்சன் நிலானி, நிவேதா, அபிநயா, ஆதித்தன், நிவேதன், லாவண்யா, லோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், தன்யா, தனீஸ், மனீசா, அஜீதா, அஸ்மித் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், ரிஜி, கேசன், தனுசிகன், ஜனுசன், தனுசிகா ஆகியோரின் மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |