மரண அறிவித்தல்
திரு தம்பையா சின்னராசா (ஓய்வுபெற்ற புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர், நாடகக் கலைஞர்)
மரண அறிவித்தல்
திரு தம்பையா சின்னராசா (ஓய்வுபெற்ற புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர், நாடகக் கலைஞர்)
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,யாழ். அம்பனை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை கந்தசாமி ஆசிரியர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சின்னராசா அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்புக்கரசி, கலையரசி, தமிழரசி, இங்கர்ஷால் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, பொற்கொடி, காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தர், இரத்தினம், முத்தம்மா, சரஸ்வதி, கனகம்மா, தருமலிங்கம், மார்க்கண்டு, செல்லத்துரை, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரம், யோகேஸ்வரன், தனேந்திரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்திரா, சுமித்திரா, டபித்திரா, யனுஷன், கயோனா, சுயானி, தமிழவன், அருஸ், அரிஷா, மிதுலேஷ், யவினேஷ், நீலேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கந்தசாமி ஆசிரியர் வீதி,
கந்தரோடை மேற்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்