மரண அறிவித்தல்
திரு நாகமுத்து கந்தசாமி (முன்னாள் அதிபர்- தெல்லிப்பழை யூனியன் கல்லூரி)
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தசாமி அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பார்த்திபன் (சுவிஸ்), வாசுகி (அதிபர்- கோட்டைக்காடு மகாவித்தியாலயம், மல்லாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பேபி மனோகரி (சுவிஸ்), சச்சிதாதந்தம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமாரதாசன் (கனடா), காலஞ்சென்றவர்களான கணேதாசன், மகேசதாசன், சிவபாதசுந்தரம், சித்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்டீபன், மெளனிசா, மகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 2:00 மணியளவில் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அன்னவாசா,
சூராவத்தை,
சுன்னாகம்.
தகவல்,
குடும்பத்தினர்.