மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் கனகலிங்கம் (கண்ணையா- முன்னாள் வர்த்தகர் யாழ் மாட்டீன் றோட், கனகலிங்கம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்)
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரைதீவைப் பிறப்பிடமாகவும், மாட்டீன் றோட்டை வசிப்பிடமாகவும், கொழும்புத்துறை மணியம் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கனகலிங்கம் அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(தென்னம்பிள்ளை) கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா(சுன்னாகம் போசனசாலை), இலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமார் (டென்மார்க்), பிறேம்குமார் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சபாரத்தினம் (அரசாங்க அதிபர்), தர்மரத்தினம் (தொழிலதிபர்), குணபாலசிங்கம் (வர்த்தகர்) , மற்றும் பரமலிங்கம் (வர்த்தகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதர்சினி (டென்மார்க்), கம்ஸா (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லரிஸா (டென்மார்க்), மனோரிஸா, துர்க்கா, ஆய்ஸா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற தர்மரத்தினம் (வர்த்தகர்- சுன்னாகம்), சுந்தராம்பாள், சந்திராதேவி, நாகம்மா, கமலநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
பேரம்பலம் (முன்னாள் வர்த்தகர், சுன்னாகம், கனடா), மனோராணி (கனடா), பேரின்பநாதன் (முன்னாள் வர்த்தகர்- ஜெர்மனி), மனோரஞ்சி (பிரான்ஸ்), நாகேஸ்வரி (பிரான்ஸ்), குகநாதன் (இந்திரன்- இராசலட்சுமி உரிமையாளர், யாழ்ப்பாணம்), தங்கேஸ்வரி, கோகிலநாதன் (நாதன் ரேடிங்கொம்பனி- டென்மார்க்), காலஞ்சென்ற கமலநாதன் (கண்ணன்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சந்திரா (கனடா), அமிர்தலிங்கம் (வர்த்தகர், கனடா), மலர் (ஜெர்மனி), நல்லையா (வர்த்தகர், பிரான்ஸ்), முத்துலிங்கம் (பிரான்ஸ்), ரமா (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கண்ணன், மரியா (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இன்பம் அந்தி சேவை ஒட்டுமடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-11-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
டிலக்கசன்