மரண அறிவித்தல்
திரு பொன்னையா குமாரசாமி
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா குமாரசாமி அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பகவதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
முகுந்தன், அகிலன், தமயந்தி, வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவமலர், சிந்தாதேவி, ரவிகரன், ராஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தாதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற அழகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம், சத்தியபாலசிங்கம், புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கயல்விழி, கபிஷன், வினோஷன், பிறனிஷன், கனிஷா, ஆர்த்தி, ஆரனி, ஆராபி, சண்முகப்பிரியா, பிரணவன், கர்ணிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.