மரண அறிவித்தல்
திரு வடிவேலு நடராசா
திரு வடிவேலு நடராசா, (ஓய்வுநிலை அதிபர்), (வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய அன்னதான சபை பொருளாளர்)
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு நடராசா (ஓய்வுநிலை அதிபர்) , (வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய அன்னதான சபை பொருளாளர்) அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வை. கதிரிப்பிள்ளை, இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரூபிகா, சற்குணராசா, காலஞ்சென்ற அகிலநேசன், ஜனுவதனன், துஷாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, லோகநாதன், அன்னம்மா, பார்வதி, இளையபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரும்,
தவராசா, ஜெயராசா, காலஞ்சென்ற சூரியகுமார், சந்திரகுமார், அஞ்சனவர்மன், பகவதி அம்மன், நந்தினிஅம்மன், கலாநிதி அம்மன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.04.2020) புதன்கிழமை பி.ப. 2.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வற்றாப்பளை இந்துமயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.