மரண அறிவித்தல்
திரு வல்லிபுரம் சபாரத்னம் (இளைப்பாறிய பரந்தன் நெல் ஆராய்ச்சி அதிகாரி)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2016/01/58fc2a50-8503-4841-a9bd-a71867488f62-copy-300x352.jpg)
யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சபாரத்னம் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கமலேஸ்வரி, கமலநாதன், கமலகுமாரி, கமலதாசன், கமலராஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, வினாசித்தம்பி, மற்றும் செல்லமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வபாரதி, குணராசா, ஜெயசோதி, முத்துசாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பர்ப்பநாதன், சிவக்கொழுந்து, திசைவீரசிங்கம், சிவபாக்கியம், மற்றும் இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டசிகரன், டர்சிகா, யோய், தோமஸ், கஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்