மரண அறிவித்தல்
முருகையா விஜயகுமாரன் (திருமால்)
இணுவிலைப் பிறப்பிடமாகவும் ,சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா விஜயகுமாரன் (திருமால்) 15.11.2015 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகையா சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும் கனகரத்தினம் -வள்ளியம்மை தம்பதியரின் மருமகனும் ,புவனலோஜியின் (மோகனா)அன்புக் கணவரும் .சபிதா,விஜிதா ஆகியோரின் பாசமிகுதந்தையாரும் ,கருணானந்தம் (இந்தியா),காலஞ்சென்ற வர்களான கணேஸ்வரன்,கெங்காதரன் மற்றும் தர்மகுலரணி (பிரான்ஸ்),கணேசலிங்கம் (சின்னராசா),கதிர்காமநாதன் (அரசன் -சுவிஸ்),கமலநாதன் (உமாபதி-லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் உமாகாந்தன் (உமா -நோர்வே),பவாஸ்காந்தன் (விந்தன்-சுவிஸ்),ஜெயக்காந்தன் (லண்டன்),காஞ்சனா (கனடா),றயனா (லண்டன்),மீனா (இலங்கை),அம்பி (இலங்கை),ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 19.11.2015 வியாழக்கிழமை இலங்கை நேரப்படி பி.ப 4.30 மணிக்கு sand strasse 50,7000 chur சுவிஸ்லாந்து என்னுமிடத்தில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
சோளங்கன் ,கரணவாய் மேற்கு ,கரவெட்டி என்னும் முகவரியில் வசிக்கும் கனகரத்தினம் குடும்பத்தினரின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு நினைவு கூரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
கனகரத்தினம் குடும்பத்தினர்
சோழங்கன்,
கரணவாய் மேற்கு .