மரண அறிவித்தல்
வல்லிபுரம் பத்மநாதன்
புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் அத்தையைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவருமான வல்லிபுரம் பத்மநாதன் 23.10.2015 வெள்ளிக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் -சற்குணவதி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வேதவனம் -இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராமநாதன், பரமேஸ்வரி, மற்றும் புவனேஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரரும் பொன்னம்பலம், கிருஸ்ணபிள்ளை, ஆகியோரது அன்பு மைத்துனரும் ஸ்ரீசிதம்பரலிங்கம், பத்மசீலன், பாகியசீலன், வனதரூபி,தரணி ஆகியோரின் அன்புத் தந்தையும் புஸ்பமலர், சிவானந்தன், வசந்தகுமார், சரோஜினிதேவி, ஜெகநிதி,ஆகியோரின் அன்பு மாமனாரும் தனிஸன், தயானி,கிருஷானி, வினுஜா,அபிலன்,குயிலினி, சாமிநா,அபிசனா,மகிழ்னன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 26.10.2015 திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
அத்தாய்,
அல்வாய்.
தகவல் :குடும்பத்தினர்