மரண அறிவித்தல்
விஜயராகவன் (VIJI) சச்சிதானந்தம்பிள்ளை
சித்தங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டவருமான விஜயராகவன் (VIJI) சச்சிதானந்தம்பிள்ளை அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம், 21ம் திகதி இறைவனடி எய்தினார்.
அன்னார் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பீடம் (E86) மற்றும் city பல்கலைக்கழகம், இலண்டன் பொறியியற்பீடப் பழைய மாணவரும் ஆவார். North west Investment Management என்னும் நிறுவனத்தில் Senior Systems Architect ஆக மிகச் சிறப்பாகக் கடமை ஆற்றியவர்.
விஜயராகவன் சிறந்த ஒரு பாடகர். ஆழ்கடல் நீச்சல் (Scuba Diving) மற்றும் கிரிக்கட் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். RedBridge கிரிக்கட் கழகத்தின் அணித் தலைவராகவும் கடமை ஆற்றியவர்.
அன்னார் மறைந்த சச்சிதானந்தம்பிள்ளை சின்னத்தம்பி (நீர்வேலி / இலண்டன்) மற்றும் ஜெகதீஸ்வரி சச்சிதானந்தம்பிள்ளை (சித்தங்கேணி / இலண்டன்) ஆகியோரின் அருமை மகனும்,
மறைந்த சிவகுரு அமிர்தலிங்கம் (உசன் / இலண்டன்), மறைந்த சந்திரா அமிர்தலிங்கம் (குரும்பசிட்டி/இலண்டன்) ஆகியோரின் அன்பான மருமகனும்,
தீபா விஜயராகவனின் அன்புக் கணவரும், கிஷோர் மற்றும் அஷ்வினியின் ஆசைத் தந்தையும், சிவலோஜினி (இலண்டன்), சிவகாயத்ரி (இலண்டன்) மற்றும் சிறீஷ்காந்தநேசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவசிதம்பரம், கதாதரன், விஜயன் மற்றும் அருந்தாவின் நேசமிகு மைத்துனரும், ஆவார்.
அன்னாரின் குடும்பம், ஒரு அன்புக் கணவராக, பொறுப்பும் பாசமுமுள்ள தந்தையாக, திறமை மிகுந்த மகனாக, கருணை மிகுந்த சகோதரராக இவ்வேளையில் விஜயராகவனை நினைவு கூறுகின்றது.
இறுதிக் கிரியைகளின் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.