31 நாள் நினைவஞ்சலி

திருமதி கனகம்மா செல்லையா

தோற்றம்: 16.05.1933   -   மறைவு: 12.12.201

ஈகையெனும் நற்பண்பை
ஞாலம் முழுதும் பரப்பிவிட்ட இதயமகள்
நீ இன்று மீளாது தூங்குகின்றாய்
நாம் இங்கு புலம்புகிறோம்!
கதறுகிறோம் நின் புன்னகை வதனம் தேடி

பசுமரமாய் நின்றெமக்கு நிழல் தந்த ஈகைத்தாயே
நீண்ட தூரம் சென்றாயோ?
வாடுகின்றோம் தேடுகின்றோம் உன் நிழல் தேடி!

ஊன் உருக்கி உடல் வருத்தி உழைத்த உத்தமியே
நீள் துயில் கொள்ளும் நியாயம் தான் என்னே?
தாய் இழந்த சேய்கள் நாம் வலுவிழந்து
துடிக்கின்றோம் அன்னை உன்னைத் தேடி!
பூமித் தாயுடன் அன்னியமானதோ
மணியே உன் பூவுடம்பு

அம்மாவாய் எமக்கிருந்து அறிவுரைகள் கூறி
அன்புடனே சோறூட்டி ஆளாக்கி விட்ட அன்னையே
இன்று தெய்வமாய் உயர்ந்து நின்று
எமக்கு ஆசி வழங்குகின்றாய்
உன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் இறைவனை!!!

 

 

நிகழ்வுகள்
அன்னாரின் அந்தியொட்டி கிரியை
திகதி : 09.01.2016
இடம் :
விட்டுக் கிருத்தியம்
திகதி : 11.01.2016
இடம் :
தொடர்புகளுக்கு
பிள்ளைகள்
தொலைபேசி : 00940215612346