மரண அறிவித்தல்
Dr. குணபாலசிங்கம் ஜீவராசன் (வேவி, சுகாதார வைத்திய அதிகாரி- வவுனியா, பழைய மாணவர்- புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி)
யாழ். கோப்பாய் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் ஜீவராசன் அவர்கள் (21-10-2015) புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணபாலசிங்கம், சோதிலட்சுமி (செல்லக்கண்டு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செந்தி (ஆசிரியை மு/வித்தியானந்தா கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
சம்யுதன் (மு/வித்தியானந்தா கல்லூரி), தஸ்வினி (மு/கலைமகள் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற உமாகாந்தன், பத்மாதேவி (பிரான்ஸ்), பாஸ்கரன் (பவுண்- கனடா), விமலாதேவி (லண்டன்), காந்தரூபன் (ரூபன்- லண்டன்), கோமளாதேவி (கனடா), காலஞ்சென்ற பிறேமளாதேவி, தர்ஷன் (புதுக்குடியிருப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அரியபுத்திரர் (பிரான்ஸ்), லோகா (கனடா), காலஞ்சென்ற சக்திவேல், மாலதி (லண்டன்), சுரேஸ்குமார் (கனடா), சிவனேசன் (வவுனியா), தீபா (புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை (25-10-2015) ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் முள்ளியவளையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளியவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுகாதார வைத்திய அதிகாரி,
உத்தியோகத்தர்கள் வவுனியா