மரண அறிவித்தல்
அமரர் திரு. வீரமுத்து சோமலிங்கம், (B.A.) ஓய்வு பெற்ற அதிபர்
வட்டுக்கோட்டை, சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இரண்டாம் குறுக்குத் தெருவில் வாழ்ந்தவரும், தற்போது கனடா, நோர்த் யோர்க்கினை வசிப்பிடமாகக் கொண்டவரும் ஆன, திரு. வீரமுத்து சோமலிங்கம் அவர்கள், 21.10.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வீரமுத்து – சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வீராச்சாமி – சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பதுமநிதி (ஓய்வு பெற்ற ஆசிரியை, யாழ். மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யசோதரன் (B. Sc – Architecture), சுபத்திரா (B.A.SC), பரந்தாமன் (B. Sc. – Eng’), நந்தகுமார் (M. Sc., B.A.SC. Eng.), ரவிசங்கர் (B.A.SC. Eng.), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீவானந்தன் (B.A.SC), கோமதி, கலைச்செல்வி, தமயந்தி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசலக்ஷ்மி (வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற ஆசிரியர்களான, தெய்வேந்திரம்பிள்ளை, J.P., தங்கராசா, ஆகியோரின், அருமைச் சகோதரரும்,
கஜேந்திரா, கனஸ்தனா, சஞ்ஜித், நர்த்தனன், மெளனிக்கா, கரிகாலன், லக்ஷனா, கணன், ஆதித்தன், யாழினி, தமிழினி, அரிஞ்சயன், சகானா, வீரா, ஆகியோரின், பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல், 3280, Sheppard Avenue East, Scarborough – வில் அமைந்துள்ள Highland Funeral Home and Cremation Centre – இல், 23.10.2012 (செவ்வாய்க்கிழமை), 24.10.2012 (புதன்கிழமை) ஆகிய தினங்களில், மாலை 5.00 மணியில் இருந்து இரவு 9.00 மணி வரையிலும். பார்வைக்கு வைக்கப்பட்டு. 25.10.2012 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பின்னர், 4570, Yonge Street, North York , Ontario, M2N 5L6 (Yonge and Sheppard) – இல் அமைந்துள்ள Forest Lawn Mausoleum and Cremation Centre – இல், தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்