மரண அறிவித்தல்

இராஜப்பு மரியநாயகம் (செல்லக்கண்டு)

தோற்றம்: 10.10.1958   -   மறைவு: 17.12.2016

 

 

புதுக்குடியிருப்பு, 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ஆம் வட்டாரம், இரணைப்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜப்பு மரியநாயகம் கடந்த (17.12.2016) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராயப்பு – திரேசம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அந்தோணிமுத்து (துரைமணி) – விசிறித்தம்மா (நேசமணி) தம்பதியரின் அன்பு மருமகனும் ஜெரல்டீனின் (ரதி) அன்புக் கணவரும் சாள்ஸ் சாந்திக்குமாரின்(குட்டி) அன்பு தந்தையும் டலிமா (லண்டன்), டேவிட், செல்வநாயகம்(லண்டன்), மரிய கொறட்றி, மேரி கொறட்றி, அருள் நாயகம் (ஜேர்மனி), நேசநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும் வதனி (லண்டன்), கலா(லண்டன்), ரதி, குமார், நிஷாந்தினி(ஜேர்மனி), அனிற்றா(பிரான்ஸ்), கலா, லோகநாதன்(பிரான்ஸ்), ஜெராட்(லண்டன்), றெஜினா(பிரான்ஸ்), எட்வின் (பிரான்ஸ்), யூட்(லண்டன்), யான்போல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.12.2016) வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று இரங்கல் திருப்பலி முற்பகல் 11.00 மணியளவில் இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் இடம்பெற்று புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய சேமக்கலையில்
திகதி : 22.12.2016
இடம் : புதுக்குடியிருப்பு
தொடர்புகளுக்கு
ஜேரோம்ஸ்
தொலைபேசி : 0779672525
கைப்பேசி : 0772343272