மரண அறிவித்தல்

கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம்(ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம் , முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்)

தோற்றம்: 16 டிசெம்பர் 1967   -   மறைவு: 10 சனவரி 2018

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி வீரமங்கை யோகரத்தினம்(ஆங்கில சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), பிறேமதாஸ் குமராசிறி(மானிப்பாய் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ரஞ்சித்குமாரசிறி(பிரான்ஸ்), வீரமனோகரி ஸ்ராலினினா(ஆசிரியை), காலஞ்சென்ற விஜயராஜசேகரகுமாரசிறி, அருண்முகன் சாயிபாபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம்(பொறியியலாளர்), யோகேஸ்வரி, சாந்தி, கோபிச்சந்திரன்(ஆசிரியர்), கலிஸ்ரா(ஜெர்மனி), மணிமலர் குணசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ரஜனிகா ரமேஸ்குமார், ரோனி, ஸ்ராலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நோபல், ஜஸ்மினி, விஜயதர்சினி, விஜயடயானா, சயந்திகா, கரோலினா, ஸ்ராலினா, தாரகா, கெவின் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அபிசேக் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் காரைநகர் நீலிப்பந்தனையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
நதீரா(மனைவி) — இலங்கை
கைப்பேசி : +94776073151
பிரேம்குமாரசிறி(காரைநகர்) — இலங்கை
கைப்பேசி : +94776112664
வீரமங்கை(காரைநகர்) — இலங்கை
கைப்பேசி : +94779469547
சாயிபாபா — ஜெர்மனி
தொலைபேசி : +4923899286949