மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் அம்பலவாணர் (கணக்காளர் லண்டன்)
காரைநகர் களபூமி விளானை பிறப்பிடமாகவும் இல.50 சுவிசித்திராம வீதி, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அம்பலவாணவர் அவர்கள் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற நாகேஷ்வரியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (சட்டத்தரணி) லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிரப வர்த்தகர் S.V முருகேசு – இராசம்மா தம்பதியின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் – அன்னம்மா (மலேசியா) மற்றும் இராசரெத்தினம் மனோன்மணி, காலஞ்சென்ற அமிர்தசிங்கம் சரோஜினி ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (22.07.2016) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 4.00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
S.V.M குணரத்தினம்