மரண அறிவித்தல்
திரு சுவானி ஜேசுராஜா (JP சமாதான நீதவான்)
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுவானி ஜேசுராஜா அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் சுவானி மரியம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான மரிசலின் அந்தோனி அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
மரிய ஜெயசீலி(அரசி) அவர்களின் கணவரும்,
டிலானி(பிரான்ஸ்), டிரோனி(கொழும்பு), அலன் கிளரன்ஸ்(கொழும்பு) ஆகியோரின் தந்தையும்,
யூட் நிச்சன்(பிரான்ஸ்) அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, அந்தோனியம்மா, ஞானபிரகாசம் மற்றும் றீற்றம்மா, அத்தனாசி, ராஜா, அருளப்பு ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-01-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் 28 1/8 ஜம்பட்டா வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மாதப்பிட்டி பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்