மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் சுப்பையா
மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் சுப்பையா
யாழ். சுழிபுரம் பறாளாய் றோட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுப்பையா அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், முருகேசு லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவரஞ்சினி(ஐக்கிய அமெரிக்கா), மனோரஞ்சினி(வவி-கனடா), சுபராஜ்(கனடா), நளினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பருவதம், ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம், விவேகானந்தராஜா, கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, ரமணன், திவ்யா, சௌமியா, லாவண்யா, சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சயானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்