மரண அறிவித்தல்
திரு பாலசுப்பிரமணியஐயர் சிற்சபேசக் குருக்கள்
இந்தியா சிதம்பரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியஐயர் சிற்சபேசக் குருக்கள் அவர்கள் (15-08-2016) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியஐயர் (பணிப்பாளர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), சாரதாம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செவ்வந்திநாதஐயர் ஜானகி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீவித்தியா, பாலசுப்ரமணிய சர்மா(ஷங்கர்), ஸ்ரீவத்ஸலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மீனலோஜினி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, சுசிலாதேவி, காலஞ்சென்ற பாஸ்கரன், ராதா, சுந்தர் ராமன், கல்யாணி, விமலா, கமலா, சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதசர்மா, சுகன்யா, சுவாமிநாதராகவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவஸ்ரீ பரமானந்தக்குருக்கள், காலஞ்சென்ற குமாரசாமிசர்மா, சிவஸ்ரீ செந்தில்நாதக்குருக்கள், பிரம்மஸ்ரீ சோமாஸ்கந்தசர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதீஸ், ஸ்ரீஹரி, ஸ்ரீநிகேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் (16-08-2016) செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கொழும்பு பொரளை A.F ரேமன்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:45 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்