மரண அறிவித்தல்
திரு பேரம்பலம் தேவானந்தன் (ஆனந்தன் , பழைய மாணவர் – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி(Jaffna College), மாஸ்டர், முன்னாள் ஆசிரியர்- வவு/கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயம்)
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் தேவானந்தன் அவர்கள் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (அதிபர்- ஸ்கந்தபுரம் இல. 01 அ.த.க. பாடசாலை) ஜெயமணி மேரிறோஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அழகரத்தினம், நித்தியானந்தபூபதி (பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், நீலவேணி ( நிலா – முன்னாள் நடன ஆசிரியை, CCTMS – வவுனியா ) அவர்களின் அன்புக் கணவரும், சுஜார்த்தன் (University of salford), நிஜார்த்தன் (Birkdale High School) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராணி, ராஜன், ரஞ்சன், கரன், ரகு, காந்தன், ரஞ்சி, பாபு, திலகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், இராசகிளி, செல்வம், சிறீ, சந்திரன், பேபி, ஜெனா, திலகன், காலஞ்சென்ற தேவி, இளங்கோ, மதி, வதனி, காலஞ்சென்ற ஞானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்