மரண அறிவித்தல்
திரு பொன்னுத்துரை சிவயோகராசா
திருகோணமலை சிவன்கோயிலடியை பிறப்பிடமாகவும் பொன்னையா ஒழுங்கை ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் தற்பொழுது அமெரிக்கா நியுஜெசி மாநிலம் நேவாக்கை (Newerk) வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவயோகராசா (22.02.2016) திங்கட்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவா்களான பொன்னுத்துரை – செல்வநாயகம் தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் – பூமாதேவி தம்பதியின் அன்பு மருமனும், ஜெயலட்சுமியின் அன்புக் கணவருமாவார்.
பிருகாஷினி, கஜாஜினி, பிரோஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும், விஐயநீதனின் அன்பு மாமனாரும், தருணீஸ்வர், ஜயணீஸ்வர், விஸ்வமாயா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
நாகரட்ணம் லட்சுமிகாந்தன் (அவுஸ்ரேலியா), நாகரட்ணம் கதிர்காமநாதன் (இலங்கை), நாகரட்ணம் ரவீந்திரன் (லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற சிவலிங்கம் ஹரிலட்சுமியின் (சிறி) அன்பு மைத்துனியுமாவார்.
விஷ்வலிங்கம் நவநீதலோஜனி (நெதர்லாந்து), சண்முகநாதன் காந்தநீதன் (லண்டன்), சுபாசினி ஈசன் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்