மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை ஜெயசீலன் (கரவெட்டித்திடல், நாகேஸ்வரா வித்தியாலயம் ஆசிரியர் – B.SC)
முரசுமோட்டை பழைய கமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெயசீலன் நேற்று (04.03.2016) காலமானார்.
அன்னார் வேலுப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ஜெயச்செல்வியின் (ஆசிரியை- நாகேந்திரபுரம் வித்தியாலயம்) அன்புக் கணவரும்,
சுப்பிரமணியம் – இராசேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
கெளதமி, அபிநயா, அச்சுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்வதிப்பிள்ளை பரமேஸ்வரி, புவனேஸ்வரி சத்தியசீலன், குணசீலன், யோகேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 06.03.2016 ஞாயிற்றுகிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக பி.ப 2.00 மணியளவில் முரசுமோட்டை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
சகோதரர் வே.குணசீலன்
மற்றும் குடும்பத்தினர்.