மரண அறிவித்தல்

திருமதி கமலாம்பிகை பாலசுப்பிரமணியம்

கச்சேரி நல்லூர் வீதி, மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் 24.12.2015 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை -கெளரியம்மா தம்பதியரின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான நல்லசேகரம்பிள்ளை -தங்கம் தம்பதியரின் மருமகளும்,

பாலசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், ஞானாம்பிகை, விக்கினேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும்,

கஜமுகன் காலஞ்சென்ற கார்த்திகேயன் (கணக்காளர்) மற்றும் சரஸ்வதி, நாகம்மா ஆகியோரின் மைத்துனியும்,

வேல்வேந்தன் (பொறியியலாளர்- U.K), வாசுகி (U.K) ஆகியோரின் பெரிய தாயாரும்,

ஞானகௌரி (U.K), திருக்குமார் (U.K), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுகன் (U.K),வாகீசன் (U.K),கஜானன் (U.K),பவித்திரா (U.K) ஆகியோரின் பேர்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக காலை 9 மணியளவில் காடாகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : க.ந பாலசுப்பிரமணியம் (கணவர்)

ஏழாலை கிழக்கு,
ஏழாலை.

நிகழ்வுகள்
இறுதிக் கிரியை
திகதி : 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : ஏழாலை கிழக்கிலுள்ள அன்னாரின் இல்லம்.
தகனம்
திகதி : 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை 9.00
இடம் : காடாகடம்பை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 24 23 490