மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி கனகரத்தினம்
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ரொறன்ரோவை (கனடா) வாழ்விடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகரத்தினம் அவர்கள்
25-01-2019 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற கிருஷ்னர், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மகளும்
தில்லைநாதன் (இலங்கை) மற்றும் காலம் சென்றவர்களான செல்லமுத்து, வைரமுத்து, வேலாயுதபிள்ளை, தாமோதரம்பிள்ளை, சீதேவிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலம் சென்ற மயில்வாகனம் கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்
சோதிநாதன் (இலண்டன்), சரோசினி (கனடா), ஞானசேகரம் (இலண்டன்), கௌரி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்
தங்கவேலு (நக்கீரன்),
Dr.ஸ்ரீபாலேந்திரா, இந்துமதி, ஜில் ஆகியோரின் அன்பு மாமியாரும்
இளங்கோ (காலம்சென்ற துஷ்யந்தி), மதியழகன் (ஜெனி), மணிவண்ணன்(தேவி), இராசேந்திரன் (இந்துமதி) அருண்மொழி (தமிழ்ச்செல்வி), திருமகள் (பாலகுமார்), சேரன்(ப்ரியா), மார்க்கரட் (யஸ்ரின்) அமரா (யேமி), பிரசாந்தன்(ரோஷினி),
Dr.சர்மிளா, அந்தோனி (கிலயர்), கிறிஸ்டீனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
டானியல், யோசேப், மரியா, கோடி, அபிராமி, மாறன், மீரா, அரசன், நிலா, வெற்றி, வன்னி, வடிவு, பாரி, அழகன், இனியன், வைகை, ரிஷி, ஷேன், ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவர்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.