மரண அறிவித்தல்
திருமதி தெய்வநாயகி சிவசுப்பிரமணியம்
வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன் காட்டை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி(இளைப்பாறிய கிராமசேவகர், ஆயுர்வேத வைத்தியர்) அன்னமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற வைரமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசுப்பிரமணியம்(ஐயா மானேஜர்- இளைப்பாறிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும், சிவசுந்தரம்(ஜெர்மனி), சிவநேசமலர்(லண்டன்), சிவானி(ஆயுர்வேத வைத்தியர்- இலங்கை), சிவரஞ்சனி(ஜெர்மனி), சிவராஜினி(லண்டன்), சிவராசா(ஆசிரிய ஆலோசகர்- இலங்கை)ஆகியோரின் பாசமிகு தாயாரும், இந்திராதேவி, தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சிவரஞ்சனி(ஜெர்மனி), சிவபாலன்(லண்டன்), புவனேந்திரராஜா(GM- பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர், இலங்கை), சற்குணானந்தம்(ஜெர்மனி), குணசீலன்(லண்டன்), சசிதா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும், காலஞ்சென்ற பாலசுந்தரம்(இளைப்பாறிய போலீஸ் அதிகாரி- இலங்கை), லட்சுமி(கனடா), மதிவதனராணி(இலங்கை), சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற யோகராஜா(இலங்கை)ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், ராகுலன், பிரவீன்(லண்டன்), டிலானி, நிஷானி, பவிஷன், பபித்தன், சயனி(ஜெர்மனி), தேசினி, விபீசன், ரபீசன், அகீசன், தரங்கினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கதிரவேலர் பூவரசங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் |