மரண அறிவித்தல்
திருமதி பிரியதர்சினி யெளவனகுமார்
யாழ். நல்லூர் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியதர்சினி யெளவனகுமார் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி மகாதேவன் கருணாநிதி தம்பதிகளின் பாசமிகு மூத்தமகளும், இராமையா, காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்
யெளவனகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ரிதுஸா அவர்களின் பாசமிகு தாயாரும்,
பவேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரபாகரன், கிருபாகரன், பிரியறூபினி, ஞானகரன், சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
லலித்குமார், இராணி, ஜெயம், குகன், சாரதா ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Get Direction226/73, அம்மன் நகர், தோணிக்கல், வவுனியா