மரண அறிவித்தல்

நாகநாதி ராஜசேகரன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

தோற்றம்: 22.11.1947   -   மறைவு: 13.03.2016

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், நீர் கொழும்பு பெரியமுல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதி ராஜசேகரன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) நேற்று (13.03.2016) காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற நாகநாதி – பார்வதி தம்பதியரின் அன்ப மகனும், அனஸ்ராவின் (ஆசிரியை – நீர்கொழும்பு விஐயரட்ணம் இந்து மத்திய கல்லூரி) கணவரும், அனிரனின் பாசமிகு தந்தையுமாவார்.

ராஜகுமார், ராஜமலர், ராஜநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதனும், துஷானி, தர்மேஷ் ஆகியோரின் மாமாவும், நாவாந்துறையை சேர்ந்த அன்ரன், மேகலா, சியாமா, ராஜி, யூஜின் (பிரான்ஸ்), சுபோ, ஜோசப், அலெக்ஸ், நீல்பிறான், குயின்ரா ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரது பூதவுடல் 134,சிலாபம் வீதி, நீர்கொழும்பு, W.S பெர்னாந்து மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இன்று (14.03.2016) திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளில் கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்காக பிற்பகல் 4 மணியளவில் நீர்கொழும்பு இந்து பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
மனைவி அனஸ்ரா ராஜசேகரன்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : (14.03.2016)
இடம் : 134,சிலாபம் வீதி, நீர்கொழும்பு, W.S பெர்னாந்து மலர்ச்சாலை
தகனம்
திகதி : (14.03.2016)
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 076 715 6015