பாராட்டு வாழ்த்து
செல்வன் தவராஜா துர்க்சாந்
நடந்து முடிந்த தரம் -05 புலமைபரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் கமு/கமு/ கார்மேல் பற்வறீமா கல்லூரி மாணவன் செல்வன் தவராஜா துர்க்சாந் 186 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
இதனை முன்னிட்டு தேசிய சேமிப்பு வங்கியினால் கொழும்பு நெலும் பொகுண அரங்கில் 31.10.2017 அன்று நடைபெற்ற விருது வழங்கும் வைபவத்தில் கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
செல்வன் தவராஜா துர்க்சாந் அவர்களை தமிழ் சி.என்.என் இணையத்தள குழுமத்தினரும் வாழ்த்துகின்றனர்.