பிறந்தநாள் வாழ்த்து
செல்வி சாய்ரூபா சத்தியரூபன்
பூக்களும் வர்ணமும் சேர்ந்து
தொடுத்த நந்தவன தேருக்கு
இன்று பிறந்த நாள்
கல்லும் உளியும் சேர்ந்து
வடித்த சிற்பத்திற்கு
இன்று பிறந்த நாள்
தமிழும் இலக்கணமும் சேர்ந்து
எழுதிய கவிதைக்கு
இன்று பிறந்த நாள்
இசையும் குரலும் சேர்ந்து
படித்த பாட்டுக்கு
இன்று பிறந்த நாள்
கடலும் காற்றும் சேர்ந்து
கொடுத்த அலைக்கு
இன்று பிறந்த நாள்
யாழ் நயினையைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாசத்தியரூபன் பாலராணி
தம்பதியினரின் செல்வப் புதல்வி சாய்ரூபா தனது முதலாவது பிறந்த நாளை பிரித்தானியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாகக் கொண்டாடுகின்றார். செல்வி சாய்ரூபாவை அன்பு அப்பா ஆசை அம்மா. ஆசை அக்கா யாழ் நயினை
அப்பப்பா பிரித்தானியா அம்மப்பா அம்மம்மாபெரியப்பாமார் சித்தப்பா சித்திமார் மாமன்மார்
மாமிமார் மச்சான்மார் மச்சான்மார்அண்ணன்மார் தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்
யாவரும் செல்வி சாய்ரூபா எல்லாச் செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழவென நயினை ஹீநாகபூசனி
அம்மனையும் பிரித்தானியா பாபாவையும் தாழ் பணிந்து வேண்டுகின்றோம்
செல்வி சாய்ரூபாவின் பிறந்த நாளை முன்னிட்டு 16.07.2015 இன்று அப்பப்பா சி.மகாதேவன் தலைமையில்
கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர்களுக்கு புதிய ஆடையும் தேநீர் விருந்துபசாரமும் நிகழ்வு இனிதே
நடைபெற்றது.