மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி லகிஷா
இன்று மூன்றாம் அகவையில்
ஓய்யாரமாய் அடியெடுத்து
வைக்கும் என் தங்க மருமகளே
என் தங்கை பெற்ற திருமகளே லகிஷா !
புன்னகைப் பூவே உன் புன் சிரிப்பில்
மலரட்டும் அத்தனை பூக்களுமே..
காந்த விழி கண்ணழகே,கார்மேக
கூந்தலழகே, பட்டுச்சேலை கட்டிய
சிலையழகே நெற்றிப்பொட்டின் முத்தழகே..
எங்கள் சிங்கார பொன்மணியே..
இமயம் கூட இனி உன்னை
அண்ணார்ந்து பார்க்கட்டும்..!
கொட்டும் மழையும் எட்டி நின்றே
தொட்டு வருடி போகும்
உன் பேரழகைப்பார்த்து..!
எட்டி பார்க்கும் ஏழு வர்ண எட்டா
வானவில்லும் கொட்ட கொட்ட பார்த்து
கொள்ளை அழகு தேவதை இவளல்லோ
என கொஞ்சி போகும்..!
நீ பிறந்த இந்நாளில் உன்னை
அள்ளி அணைத்து வாழ்த்து சொல்ல ஆயிரமாயிரம் ஆசைகள் உண்டு என்னுள்ளே
ஆனாலும் கடல் கடந்து நிற்கின்றேன் என்ற போதும் என் உணர்வுகளால் உச்சி முகர்ந்து முத்தம் பதித்து பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு
நீர்வை கந்தன் அருள் நீ பெற்று வாழ உளமார வாழ்த்துகின்றேன் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் லகிஷா குட்டி
உன் ரஞ்சன் மாமா