பிறந்தநாள் வாழ்த்து

திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி

கனடாவை வசிப்பிடமாக கொண்டவரும் தமிழ்.சி.என்.என் இணையத்தள நிறுவுனருமாகிய திரு. அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று (09.11.2017) வியாழக்கிழமை தனது  பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

தன் நலம் கருதி வாழ்பவர் மத்தியில் பொது நலம் கருதிவாழும் திரு அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ தமிழ்.சி.என்.என் குடும்பத்தினரின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

உமக்கு வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீரோ இல்லை நாமோ?
உம்மை வாழ்த்த
புதிதாய் யோசித்து, யோசித்து
நாமே புதியதாய் மாறிப்போனோம்.
யோசித்து, யோசித்தும்
பிறக்கவில்லை கவிதை??…,

ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உங்களை விரும்புவோரெல்லாம்
உங்களை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது…,
அவைகளெல்லாம்
உங்களுக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகின்றோம்.

 

தகவல்
தமிழ் சீ என் என் குடும்பம்.