விவசாய கிணற்றினுள் வீழ்ந்த நான்கு யானைகள் பாதுகாப்பாக மீட்பு!
வவுனியாசெட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் விவசாய கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த யானைகள் பலரது முயற்சியினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணற்றினுள் இன்று காலை நான்கு யானைகள் தவறி வீழ்ந்தமையை அவதானித்த கிராமவாசிகள் இது தொடர்பாக செட்டிகுளம் பிரதேசசபை மற்றும் வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் செட்டிகுளம் பிரதேசசபைக்கு சொந்தமான யேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நான்கு யானைகளையும் மீட்டு பாதுகாப்பாக காட்டிற்குள் அனுப்பிவைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை