உயிரிழந்த நிலையில் காட்டுயானை மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைப் பகுதில் உயிரிழந்த நிலையில் காட்டுயானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றுவட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாந்தாமலைப் பகுயியில் அமைந்துள்ள றெட்பாணா வீட்டுத்திட்டம் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றில் காட்டுயானை ஒன்று வீழ்ந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உடன் விரைந்து யானையை பரிசோதித்ததன் அடிப்படையில் குறித்த யானை உயிரிழந்துள்ளதை அவதானித்ததாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த யானை சுமார் 10 தொடக்கம் 15 வயது மதிக்கத்தக்கதாகும். நீதிமன்ற உத்ததவு கிடைக்கப்பெற்றதும் பிரேத பரிசோதனையின் பின்னரே இந்த யானையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றுவட்டார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குப்பட்ட பல பகுதிகளிலும் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் அட்டகாசங்களும். தொல்லைகளும், அதிகரித்த வண்ணமேயுள்ளன.

அப்பகுதியில் காட்டுயானைகளின் தாக்கத்தினால் பல அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்படுவதுவும், பெறுமதியான பயிர்கள். மற்றும் உடமைகள், வீடுகளும், இவ்வாறு காட்டு யானைகளினால் தினமும் சேதப்படுத்தி வருவதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.