புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம்!
(க.கிஷாந்தன்)
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம்இன்று (21) மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த புகையிரதத்தின் காட்சிகாண் கூட பெட்டி தண்டவாளங்களை விட்டு பாய்ந்ததில் இந்த மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.
தற்போது புகையிரத திணைக்கள அதிகாரிகளினால் புகையிரத பெட்டியை தண்டவாளங்களில் நிறுத்தி புகையிரத வீதியினை சீர்செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புகையிரத தடையினை நிவர்த்தி செய்வதற்காக நாவலப்பிட்டியிலிருந்து பாரதூக்கி புகையிரதம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பெட்டியினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதன்பின் மலையக புகையிரத சேவைகளுக்கான தடை நீங்கும் எனவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை