புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்; 1,500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பண்டிகைக் காலத்தில் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்தமை, இருப்புகளை மறைத்தமை மற்றும் விற்பனை செய்ய மறுத்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக சுமார் 1500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க தேவையற்ற உணவுகளை விற்பனை செய்தல், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புகளை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் இங்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும், முட்டை தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் சந்தைகள் மற்றும் முட்டை பண்ணைகளிலும் சோதனை நடத்தப்படும்.

இதேவேளை பண்டிகை காலங்களில் வர்த்தக மாபியாவொன்று செயற்படுவதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.